சுமார் 40 வயதுடைய ஒருவர், நாடியில் பலன் கேட்க வந்திருந்தார்.
ஐயா, "இவள் எனது மனைவி. எனது 27 வயதில் எங்களுக்கு திருமணம் நடந்தது. குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை, ஒரேயொரு தடவை கரு கூடியது. ஆனால் அந்த கர்ப்பமும் கலைந்துவிட்டது. நாங்கள் நிறைய ஜோதிடர்களிடம் ஜாதகப் பலன் கேட்டோம்.
அவர்கள் ஏதேதோ தோஷங் களைக் கூறி பலவிதமான பரிகார பூஜைகள், கிரக சாந்தி, விரதங்களைக் கூறினார்கள்.
அவை அனைத்தையும் முறையாகச் செய்தோம். ஆனால் பலனில்லை. ஒரு குழந்தை இல்லையே என்ற கவலையிருந்தது. அதைவிட விருந்து, விழா, விசேஷங்களுக்குச் சென்று, உறவினர்களுடன் சேர்ந்திருக்கும்போது, உங்களுக்கு ஒரு குழந்தை இல்லையே என்று அவர்கள் துக்கம் விசாரிப்பதுபோல் கேட்பதை எங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
என் நண்பர் ஒருவர் செயற்கை முறை யில் குழந்தைபெற மருத்துவ முறையில் முயற்சிசெய்து பாருங்கள் என்றார்.
அதைக்கேட்டு நானும், மனைவியும் ஒரு மருத்துவமனைக்குச் சென்றோம். எங்கள் இருவரையும் பரிசோதனை செய்து உங்கள் இருவருக்கும் குழந்தை பெற்றுக்கொள்ளும் உடல்தகுதி உள்ளது என்று கூறிச் சிகிச்சையளித்து, எனது விந்தணுக்களையெடுத்து, மனைவியின் கர்ப்பப் பையில் செலுத்தினார்கள். முதல்முறை கரு உண்டாகி, கர்ப்பம் தரிக்கவில்லை.
சில மாதங்கள் சென்றபின்பு, என் விந்தணுக்களில் ஒரு கருவை உண்டாக்கக்கூடிய சக்தியில்லை என்றும், அதனால் வேறு ஒருவர் விந்தினைச் செலுத்தி கர்ப்பம் தரிக்க செய்யலாம் என்று கூறினார்கள். இதற்கு என் மனம் ஒப்புக்கொள்ளவில்லை, ஆனால் என் மனைவி எப்படியாவது ஒரு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று பிடிவாதம் செய்து என்னை ஒப்புக்கொள்ளச் செய்துவிட்டாள். இருவரும் கையெழுத்திட் டோம். இரண்டாவது முறை சிகிச்சையில் என் மனைவி கர்ப்பமடைந்து, ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள்.
மகன் பிறந்து ஒரு வயதாகின்றது, பிறந்தபோது இருந்தே குழந்தைக்கு தாய்ப்பால் இல்லை, இப்போது என் மனைவிக்கு, அடிக்கடி ஏதாவது ஒரு நோய் பாதிப்பை தந்து உடல் நலிவடைந்து கொண்டேவருகின்றது. மருத்துவ சிகிச்சை செய்துகொண்டே இருக்கின்றோம். மகன் பிறந்தபின்புதான் மனைவிக்கு இந்த நிலை, மனைவியின் நோய்த் தாக்கத்திற்கும், மகன் பிறப்பிற்கும் ஏதாவது பாவ- சாப- தோஷ பாதிப்பு உண்டா? என் மனைவி நோய் நீங்கி சுகம் பெற வழிகேட்டு குருவை நாடி வந்துள்ளேன்'' என்றார்.
ஜீவநாடி ஓலையைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினேன். ஓலையில் அகத்தியர் எழுத்துவடிவில் தோன்றி, ஓலையில் நான் கூறும் பலன்கள் எதையும் அவனிடம் வெளிப்படையாக படிக்காதே, கூறாதே, நான் கூறுவதை கவனமாக மனதில் வைத்துக் கொண்டு, நான் கூறும் நிவர்த்தி, பரிகாரங் களை மட்டும் செய்யச் சொல்- அனுப்பி விடு என்று கூறி பலன்களைக் கூறத் தொடங்கினார்.
இந்த குழந்தைக்கு இது மூன்றாவது பிறவி, முதல் பிறவியில் புத்திரன்விட்ட சாபம், இந்த தாயைப் பாதிக்கின்றது.
இந்த குழந்தையின் இரண்டாவது பிறவி யில் இவனைப் பெற்ற தாய் ஆறு மாதத்தில் இறந்து போனாள். மூன்றாவது பிறவியில் இப்போது இவனை மகனாகப் பெற்ற இவன் மனைவி, நோயினால் பாதிக்கப்பட்டு, இந்நிலைக்கு ஆளாகி சிரமப்படுகின்றாள்.
புத்திர தோஷ பாதிப்புதான் இவள் நோய்க்கு காரணம்.
இந்த குழந்தை இவன் விந்தணுவில், கரு உருவாகி பிறந்த மகன் அல்ல, இவன் வம்ச வாரிசு அல்ல. இவன் சரீர திசுக்களையும், மகனின் சரீர திசுக்களையும் ஒப்பீடு (உசஆ) செய்து பார்த்தால், இருவரின் திசுக்களுக்கும் சம்பந்தம் இராது. குழந்தைக்கு இவன் பெயரளவில் தான் தகப்பனே தவிர உண்மை தகப்பன் வேறு ஒருவன்தான். அந்த உண்மையான தகப்பன் வம்சத்தில் உண்டான கர்மவினை, பாவ- சாப- தோஷம்தான், இப்போது இந்த குழந்தைமூலம் தொடர்ந்து பெற்ற தாயை பாதிக்கின்றது. ஊழ்வினைப் பதிவு, உடல் நோயைத் தந்துவருகிறது. தாய் சுகமடைய தெய்வ பிரார்த்தனை வேண்டுதல் ப-யாது. மருத்துவம் பலன் தராது. நான் கூறும் சில பாவ- சாப- நிவர்த்திகளைச் செய்யச் சொல் என்று கூறிவிட்டு ஓலையில் இருந்து மறைந்தார்.
ஓலையில் அகத்தியர் கூறியதை மனதில் பதிய வைத்துக்கொண்ட நான் அவரிடம் உங்கள் மனைவியின் வம்ச முன்னோர்கள் காலத்தில் செய்த சில செயல்களால் உண்டான பாவங்கள் தான் மனைவியின் நோய்க்கு காரணம். அந்த சாபங்கள் நிவர்த்தியாக அகத்தியர் கூறியபடி செய்யுங்கள் என்று நிவர்த்தி முறைகளைக் கூறி அனுப்பிவைத்தேன்.
இந்த உலகில் பணம் கொடுத்து பொருட்களை வாங்கினார்கள், பின்பு பிள்ளைகளை விலைக்கு வாங்கினார்கள், இப்போது பணம் கொடுத்து விந்தணுக்களை வாங்கிக்கொண்டு பிள்ளைகளைப் பெற்றுக் கொள்கின்றார்கள். இது க- கால கூத்து.
இதுபோன்று குழந்தையைப் பெற்றுக் கொள்வதால், விந்தணுக்குரியவன் எவனோ?
அவன் வம்சத்திற்கு உண்டான பாவ- சாபங்கள் இந்தக் குடும்பத்தின் வம்ச வாரிசுகளைப் பாதிக்கும். இந்தக் குழந்தையின்மூலம் வம்ச முன்னோர்களுக்கும், பெற்ற தாய்- தந்தைக்கும் செய்யும் கர்ம காரியங்கள், குடும்ப வம்ச முன்னோர்களுக்கு போய்ச் சேராது. இவன் பிறப்பிற்கு காரணமானவனின், முன்னோர்களுக்குத்தான் சேரும் என்பதை நானும் புரிந்துகொண்டேன்.
செல்: 99441 13267
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/22/agathiyar-2026-01-22-11-15-50.jpg)